இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கண்ணிவெடி அகற்றலை நேரடியாக அவதானிப்பு


இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் நேற்று (19) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் உற்பட வீரர்கள் பலர் பெரிய மடு பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர். 

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பெரிய மடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிடவே குறித்த குழுவினர் அப்பகுதிக்கு சென்றிருந்தனர். 

இங்கிலாந்து அரசின் நிதி உதவியுடன் ´மெக்´ என்ற கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பு மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட பெரிய மடு காட்டுப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவைர் ஜோ ரூட் மற்றும் வீரர்களான ஜேம்ஸ் டொரி, கீடன் ஜெனிக்ஸ், ஜொனி பெயார்ஸ்டோ, ஒலிஸ்டோன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், அணி முகாமையாளர்கள் ஆகியோர் விஜயத்தை மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டனர். 

குறித்த அணி வீரர்களை மன்னாருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(மன்னார் நிருபர் லெம்பட்)


இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கண்ணிவெடி அகற்றலை நேரடியாக அவதானிப்பு

No comments:

Post a Comment

Pages